ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆனந்தம்..ஆனந்தம்..ஆனந்தம்

முடிந்ததை செய்வோம் முடிவதற்குள் ...

இறைவன் ஆனந்த மயமானவன் ... அவனிடமிருந்து வந்த நாமும் நம்மை போல உள்ள உயிர்களும் ஆனந்த மயமனவைதான்... பால் சார்ந்த பொருளில் இருந்து உருவான உணவுகளுக்கு பாலின் குணம் இருப்பது எந்த அளவு உண்மையோ அதே போல் இறைவனிடம் இருந்து உருவான உயிரேகளுக்குள்ளும் ஆனந்தம் நிரம்ப  உள்ளது...

இதை அறிய விடாமல் தடுப்பது என்னது? ஒரே வார்த்தை அது தான் "அகங்காரம்" ( நான் - தான் - என் - என்னுடைய - என்னால் - தன்னால் ).

ஒரு வியாபாரி தன்னிடம் இருந்த வயது அதிகம் ஆனா குதிரையை  கசாப் காரனுக்கு  விற்க சென்றான் குதிரையுடன்..  இந்த விஷயம் குதிரைக்கு தெரியாது எப்பவும் போல கொண்டு போகிறான் என்று தான் நினைத்து இருந்தது.. பின் நேரம் செல்ல செல்ல வியாபாரி வேற பாதையில் செல்வதை உணர்ந்த குதிரை அவனை கவனமாக கவனித்து பின்புதா தெரியவந்தது.  தன்னை இவன் கசப்கரனுக்கு விற்க போகிறான் என்று... அதன் பின் முரண்டு பிடித்தது வியாபாரியல் முடியவில்லை... குதிரை ஓடுகிறது கத்துகிறது அதை அடக்க இவனால் முடிய வில்லை.. பின் குதிரையை அழைத்து கொண்டு தன வீட்டுக்கு சென்றுவிடுகிறான்... இதை போல பல நாட்கள் நடக்கிறது... ஒரு நாள் வியாபாரி வைராக்கியத்தோடு எப்படியோ அதை கசப்கரனிடம் ஒப்படைப்பது என்ற எண்ணத்தில் கொண்டு செல்கிறான்.. இந்த முறை அவன் பல உபகரனுடன் செல்கிறான் குதிரையுடன்.. இந்த முறை குதிரை என்னனவோ பண்ணுகிறது முடியவில்லை இறுதியில் குதிரை விற்றுவிடுகிறான்... அந்த கசாப்காரனிடமும் முரண்டு பிடித்து இறுதியில்   காட்டுக்குள் ஓடிவிடுகிறது....

நம்மிடமும் அகங்காரத்தை வளர்ப்பது  எது ? " இந்த குதிரையை போல நம்மிடம் முரண் பிடிக்கும் கோபம்>காமம்(தீராத ஆசை என்றும் பொருள்படும்)... இவைகளே ஆகும்... இவைகளால் மொத்தம் 18 தன்மைகள் உருவாகின்றன இதை நாம் சென்ற பயணத்தில் கண்டோம்.
நாமும் மிகுந்த வைரகியதொடு அந்த வியாபாரியை போல இருந்து இவைகளை நமது கட்டுபதுகுள் கொண்டுவரவேண்டும் அதுக்கு மனதை கட்டுகோள் கொண்டு வரவேண்டும்..
ஆனால் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும் " மனதை அடக்க நினைதல் நம்மை அழிக்கும்; அறிய நினைதல் குழப்பும் அதனால் தட்டி கொடுக்க  வேண்டும் " அப்படி பன்னல் மட்டுமே மனம் அடங்கும் .
எங்கே ஆனந்தம் என்று ஓடாமல் ஆனந்தத்தை நமக்குள் வரவைக்க வேண்டும். எப்படி வரவைப்பது வா என்றால் வராது  ஆனால் எளிமையாக வரவைக்கலாம் ...
நம்முடைய  செயல்களே நம்  எதிர்காலத்தை நிர்ணகிறது...
இன்று நாம் ஒரு தவறோடு அறிந்து விளையாடினால் அந்த தவறு காலத்தினால் குறிப்பெடுக்கபட்டு எதிர்காலத்தில் நம்முடன் விளையாடும்...
இதை உணர்ந்து செய்யவேண்டாததை  செய்யாமல் இருப்பதே நலம்..
எளியவழி ஆனந்தத்தை நம்முள் வரவைக்க..
" யார் ஒருவர் இந்த உலகில் உள்ள அனைத்திலும் , உயிர்கள் அனைத்திலும் சர்வம் இறை மயமாக காண்கிறானோ அவனுக்குள் ஆனந்தம் பொங்கும் அவன் இருக்கும் இடம் சொர்க்கமாகும் அவன் செல்லும் இடமெல்லாம் அமைதி பரவும் சந்தோசம் பெருகும் " இது சத்தியமான உண்மை...
என் பரம்பொருள் மீது சத்தியம்.
சர்வம் இறை மயம் மட்டுமே அனைத்தையும் பெறவும் பெருகவும் வைக்கும்..
நீங்கள் காண்பவர்களிடமும் - உங்களை எதிர்பவர்களிடமும் சொல்லுங்கள்
உங்களுக்குள் உங்களுக்காக "சர்வம் இறை மயம் " என்றும்
உங்களை எதிர்பவர்களிடம் மற்றும் உங்களை வெறுப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை நினைத்து அவர்களுக்காக உங்களுக்குள் சொல்லுங்கள் " அனைத்தும் பெருக : அனைத்தும் பெறுக"
இந்த மந்திரம் செல்வதையும் உங்கள் மனநிம்மதியையும் வரவைக்கும்...
-






சனி, 6 ஆகஸ்ட், 2011

1 .7 மரணம்

அனைவருக்கும் வணக்கம்,

இந்த வழிபோக்கன் உங்களிடத்தில் சில நாட்களாக பேச முடியாமல் 
போனதுக்கு காரணம் ஆயிரம் இருந்தாலும் 
அதில் முக்கியமானது உங்களுக்கு மரணத்தை எப்படி 
புரியவைப்பது என்றுதான், இன்று 

நம் உடல்(புலன்கள்)-மனம்-உயிர்- ஆன்மா எப்படி செயல் படுகிறது 

என்பதை ஆராய்வோம்.

" படைத்தவன், அவன் படைத்துள்ள படைப்பை விட மிக சிறந்தவன் "

" ஷுரஷ்ய தாரா நிசித துரத்யயா துர்கம்

பதஸ்தத்தவையோ வதந்தி " (கட உபநிஷம் : 1 .3 .14 )

பொருள்: ஆன்மா தேரில் பயணம் செய்பவன், உடம்பு தேர், புத்தி

தேரோத்தி, மனம் கடிவாளம், புலன்கள் குதிரைகள், உலகபொருட்கள் 
அந்த குதிரைகள் செல்வதற்கான பாதைகளாகும். உடல் - புலன்-மனம் - 
ஆகியவதுடன் கூடிய ஜீவன் வாழ்கையை அனுபவிப்பான்.

ஆன்மாவானது போதையில் இருக்கும் போது, தேரோதி புத்தி

உணர்வின்றி விழுந்துள்ளது, புலன்கள் என்றும் குதிரைகள்

தறிகெட்டு ஓடி கொண்டு இருக்கின்றன. ஒரு புதிய வழி

முறையை உடனடியாக நாம் கொண்டு வரா விட்டால் தேர் ,

குதிரை இதனால் தலைவன் ஆன்மாவுக்கு ஆபத்து வரும்.

அறியாமையினால் தேரின் தலைவனான நம் ஆன்மா தன்னை

மிக அதிகமான புத்தியுடன்,மனதுடன், புலன்களுடன்,உடலுடன்

அடையாளம் கண்டுகொண்டுள்ளது, ஆன்மா தன்னை

அனுபவிப்பவனாக கருதுகிறது

ஆன்மா தன்னுடைய உண்மை இயல்பை மறந்துவிட்டது.

இப்படியாக நினைக்கும் ஆன்மா இந்த உயிர் பிரிவின் பின் மறு

பிறப்பு எடுக்கிறது. நம்முடைய வினைகளின் தொகுப்பு படியே

பிறப்புகள் எடுக்கிறோம் பிறப்புகள் எடுத்தவுடன் இறைவன்

மறைத்தல் தொழிலை செய்கிறான். இதற்கு உதாரணமாக ஒரு

செய்தி சொல்லபடுகிறது...

இந்திரன் ஒரு சாபத்தால் பன்றியாக மாறி வாழ்வை நடத்தினான்

காலம் சென்றது அவனுக்கு பல பன்றி குட்டிகள் பிறந்தன மற்ற

தேவர்கள் எவ்வளவோ சொல்லியும் அந்த பன்றியின் வடிவில்

இருந்தா இந்திரனுக்கு புரியவில்லை. தன குட்டிகளின் மீது அளவு

கடந்த அன்பை வைத்து இருந்தான். பின், தேவர்கள் இந்திரனின்

இறுதி காலத்தை உணர்ந்து அந்த பன்றியை கொன்றனர் பின்

இந்திரன் சுய ரூபம் பெற்றான் பின் அவனுக்கு மறைத்தல் தொழிலை

உணர்ந்தான். இது போல் நாமும் நம் வினைகள் மறைக்கப்பட்டு

ஆன்மாவானது பிறப்பு எடுத்துள்ளது.

இறைவனின் பிரதிபலிப்பே ஆன்மா என்பதை உணரவேண்டும்.

ஆன்மா தான் தலைவன் என்றால்..

ஆன்மா தான் அனைத்துனாலும் பதிகிறது என்றால்...

உயிர் என்பது என்ன? அதன் அளவு என்ன? எப்படி இருக்கும்?

என்று நீங்கள் கேட்கலாம்..

1 .8 இல் நாம் இந்த கேள்விக்கான பதிலை காணபோகிறோம்.

இப்போது அனைவரும் மௌனத்துடன்

கண்களை மூடி நம்மை உணர்வோம்

" குருவே சரணம் "

" சர்வம் இறை மயம்" அனைத்தும் பெருகவே!

புதன், 20 ஜூலை, 2011

1 .6A மனம்

மனம்"கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் மூலமாக ஆட்பட்டு,உட்பட்டு

செயல்படுவது"  தன்னையே அறிந்து கொள்ளாத வரை இதனால்

ஆன்மாவானது மீண்டும் மீண்டும்  பிறப்புகளை எடுக்கிறது. அதாவது,

நாம் ஒரு பாதையில் தொடர்ந்து செல்கிறோம் அந்த பாதையில்
ஒருகடை உள்ளது நாம் முதல் இரண்டு மூன்று நாட்கள் செல்கிறோம்

 
அப்போ நம்முடைய மூக்கு வாசம் பிடிக்கும் நேராக மனம் சென்றடையும்..

 
மற்றொரு நாள் கண்கள் காணும் அப்போ நல்ல வரு வருணு

முரு முருனு சிகப்பா ஒரு மீன் ஒன்று பொரிக்கபட்டு இருக்கும் உடனே

மனம் கேட்கும் என்ன இது? புத்தி(அறிவு)  சொல்லும் இது மீன் பொரிக்க

பட்டுள்ளது என்று. இங்கே மனம் எப்படி செயல்படுன்னு தெரிந்து இருக்கும்.

மேற்கண்ட உதாரணம் கண்,மூக்கு உதவியால் மனம் வசீகரிக்க பட்டது ..

பின் அந்த பாதை வழியாக நாம் செல்லும் போதெல்லாம் இதுவே

பழக்கமாகும்.

சில நேரங்களில்...

மனம் சொல்படி கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் செயல்படுகிறது இது

எப்போ நிகழ்கிறது என்றால் நாம் பிறப்புகள் - இறப்புகளை சந்தித்து

வந்துள்ளோம் அதன் மூலமாக நமக்கு பூர்வ ஜென்ம அனுபவங்கள் /

வசங்கள் நம் கர்ம பதிவுகளில் பதிந்து இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும் ஒரு தேடல்கள் நமக்கு வருகிறது யார்

சொன்னாலும் சொல்லாமல் போனாலும் அந்த தேடல்களில்நமக்கு ஒரு

ஈர்ப்பு வருகிறது அதன் மூலமாக மனம் மற்ற இரண்டையும்

ஆள்கிறது. அடுத்து நாம் காண இருப்பது புத்தி/அறிவு.. ( அனைதையு நாம்

சுருக்கமாக காண காரணம் நமக்கு முக்கியமானது இப்போ இவைகள்

அல்ல மரணம். பின்வரும் காலத்தில் இவைகளை விரிவாக காண்போம்)



ஞாயிறு, 17 ஜூலை, 2011

1.5 சர்வ முக்தி



இந்த அட்டவணையை கையில் வைத்து கொள்ளுங்கள்..

இனி  வருபவைகள் புரிய இவைகள் உதவும்.. இது மிக 


எளிய முறையில் தயாரிக்க பட்டுள்ளது.

இப்போ முதல் வேலை நாம் மனம் - புத்தி- சித்தம்

ஆகியவற்றை அறிந்துகொள்வோம் அப்பொழுதான் மரணத்தை 


புரிந்துகொண்டு என்னுடன் பயணிக்க முடியும்...




வெள்ளி, 15 ஜூலை, 2011

1 .4 அண்டமும் பிண்டமும்

அண்டமும் பிண்டமும் என்பது உலகமும் உடலும் என்பதன் பொருள் 

அடங்கியதாகும்.. உலகத்தில் உள்ள எங்கும் பரந்து விரிந்துள்ள 

பஞ்சபூதன்களான  தீ,நீர்,நிலம்,வாயு,ஆகாயம் இவைகளே நமது உடலிலும் 

அணுக்களிலும் நிறைந்து உள்ளது. உலகில் எந்த பொருள் ஆனாலும் 

சடப்பொருள்  ஆனாலும் அதற்குள் ஆற்றல் உள்ளது. உலகின் மத்தியில் 6000 

செல்சியஸ் அளவு தீ கொழுந்து விட்டு எரிகிறது  அதனால் தான் உலகம் இன்று

தொடர்ச்சியாக நீ வட்ட பாதையில் பூமி சுழந்துகொண்டு உள்ளது ( என்ஜினை 

போல). அதே போல், நமது உடலின் மத்தியிலும் தீயானது எரிந்துகொண்டு 

உள்ளது அதனால் தான் நமது உடல் சக்தியை பெற்றுக்கொண்டு இயங்குகிறது 

வடவகனி என்ற பெயரில். இதனால், தான் உயிர்களுக்கு விந்துநாதம் உற்பத்தி 

ஆகிறது. இது போல் உலகில் என்னென்ன நிகழ்வுகள் நிகழ்கிறதோ அதுபோல் 

நமது உடலிலும் அண்ட  நிகழ்வுகள் நடக்கிறது. மரணம் 100 சதவீதம் இயற்கை  

வடிவை சார்ந்தது ( மரணத்தின் பொது உயிர் நிலையை சொன்னேன் தவிர 

மரணத்தின் காரணத்தை கூறவில்லை)
 1 .3 .தியானம் ஒரு சிறு பார்வை

என்றும் அனைத்துக்கும் இவனின் குருவான முருக பெருமானுக்கும்

யோகத்தின் குருவான என் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி க்கும்

பாதங்கள் தொட்டு வணங்கிக்கொண்டு தியானம் பார்வை தருகிறேன்

தியானத்தை விளக்க நினைப்பது பால்வெளியில் உள்ள நச்சத்திரம்

கூட்டத்தை  எண்ணுவதற்கு  சமமாகும். எனவே நமக்கு தேவையானதை

மட்டும் எடுத்து கொள்வோம்  தியானம் என்பது :


எண்ணம் - எண்ணபடுபவன்-எண்ணுபவன் ஒன்றென உணர்வதாகும்

தியானத்தை பற்றி நான் சொல்வதை விட..  பகவான் கிருஷ்ணர்

சொல்வதை ..

கேளுங்கள் ...

"ப்ப்ரயண்ட்தமனஷம் ஹி ஏஷம் யோகிநம் ஷுகம் உத்தமம்

உபைதி யான்றஜஷம் ப்ரஹம் பூதம் அகல்மஷம் "

பொருள் : நிலையான மனம் உடைய யோகி ஒருவனுக்கு பாவங்கள் நீங்கள்

பெற்று ஆத்மா அனுபவம் என்ற சுகம் ஏற்படுகிறது. அவனது ரஜோ குணம்

விலகுகிறது இதனால் அவன் ப்ரம்ம நிலையை அடைந்து விடுகிறான்  ப.கீ.6 -29

நிலையான மனம் அடைய வேண்டும் என்றால் அது தியானத்தால் மட்டுமே

சாத்தியம். அதுமட்டுமல்ல, தியானத்தை  தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே

சர்வம் இறை மயமாக காணமுடியும்.

"யோ மாம் ப்யாதி சர்வத்ர சர்வம் ச மயி பஷ்யதி

தஷ்யஹம் ந ப்ப்ரனஷ்யாமி ஸ ச மே ந ப்ப்ரனஷ்யதி "

பொருள் : என்னை எங்கும் எதிலும் காண்கிறானோ, என்னில் அனைத்திலும்

காண்கிறானோ அப்படிப்பட்ட ஒருவனை நான் கைவிடுவதில்லை , அவனும்

என்னை கைவிடுவதில்லை .( இப்படியாக வாழ்ந்து வருபவன் கூட நான் irupen ) (ப.கீ.6 - 30 )(31 )

தியானம் மனதை மட்டுமா ஒருநிலை படுத்தவில்லை உங்கள் 
 
உடலையும் உறுதி படுத்துகிறது.

தியானத்தால் :

"அழியக்கூடிய

வாழ்கையின் தடைகள்

அகற்றப்படும்போது

அழிவற்ற ஒரு வாழ்க்கை நமக்கு

கிடைத்துவிடுகிறது " ( பதஞ்சலி யோகா சூத்ரம் 1:29 )

தியானத்தை சொல்ல நிறைய முக்கியமான விஷயங்கள் உள்ளது, 
 
அதை நாம் இப்போ காண முடியாது

என்னுடன் பயணித்து வாருங்கள் சொல்கிறேன்...
 
பதஞ்சலியார் சொன்னதை மனதில் நிறுத்தி  என்னுடன் 
 
பயணம் தொடருங்கள் ..