1 .7 மரணம்
அனைவருக்கும் வணக்கம்,
இந்த வழிபோக்கன் உங்களிடத்தில் சில நாட்களாக பேச முடியாமல்
போனதுக்கு காரணம் ஆயிரம் இருந்தாலும்
அதில் முக்கியமானது உங்களுக்கு மரணத்தை எப்படி
புரியவைப்பது என்றுதான், இன்று
நம் உடல்(புலன்கள்)-மனம்-உயிர்- ஆன்மா எப்படி செயல் படுகிறது
என்பதை ஆராய்வோம்.
" படைத்தவன், அவன் படைத்துள்ள படைப்பை விட மிக சிறந்தவன் "
" ஷுரஷ்ய தாரா நிசித துரத்யயா துர்கம்
பதஸ்தத்தவையோ வதந்தி " (கட உபநிஷம் : 1 .3 .14 )
பொருள்: ஆன்மா தேரில் பயணம் செய்பவன், உடம்பு தேர், புத்தி
தேரோத்தி, மனம் கடிவாளம், புலன்கள் குதிரைகள், உலகபொருட்கள்
அந்த குதிரைகள் செல்வதற்கான பாதைகளாகும். உடல் - புலன்-மனம் -
ஆகியவதுடன் கூடிய ஜீவன் வாழ்கையை அனுபவிப்பான்.
ஆன்மாவானது போதையில் இருக்கும் போது, தேரோதி புத்தி
உணர்வின்றி விழுந்துள்ளது, புலன்கள் என்றும் குதிரைகள்
தறிகெட்டு ஓடி கொண்டு இருக்கின்றன. ஒரு புதிய வழி
முறையை உடனடியாக நாம் கொண்டு வரா விட்டால் தேர் ,
குதிரை இதனால் தலைவன் ஆன்மாவுக்கு ஆபத்து வரும்.
அறியாமையினால் தேரின் தலைவனான நம் ஆன்மா தன்னை
மிக அதிகமான புத்தியுடன்,மனதுடன், புலன்களுடன்,உடலுடன்
அடையாளம் கண்டுகொண்டுள்ளது, ஆன்மா தன்னை
அனுபவிப்பவனாக கருதுகிறது
ஆன்மா தன்னுடைய உண்மை இயல்பை மறந்துவிட்டது.
இப்படியாக நினைக்கும் ஆன்மா இந்த உயிர் பிரிவின் பின் மறு
பிறப்பு எடுக்கிறது. நம்முடைய வினைகளின் தொகுப்பு படியே
பிறப்புகள் எடுக்கிறோம் பிறப்புகள் எடுத்தவுடன் இறைவன்
மறைத்தல் தொழிலை செய்கிறான். இதற்கு உதாரணமாக ஒரு
செய்தி சொல்லபடுகிறது...
இந்திரன் ஒரு சாபத்தால் பன்றியாக மாறி வாழ்வை நடத்தினான்
காலம் சென்றது அவனுக்கு பல பன்றி குட்டிகள் பிறந்தன மற்ற
தேவர்கள் எவ்வளவோ சொல்லியும் அந்த பன்றியின் வடிவில்
இருந்தா இந்திரனுக்கு புரியவில்லை. தன குட்டிகளின் மீது அளவு
கடந்த அன்பை வைத்து இருந்தான். பின், தேவர்கள் இந்திரனின்
இறுதி காலத்தை உணர்ந்து அந்த பன்றியை கொன்றனர் பின்
இந்திரன் சுய ரூபம் பெற்றான் பின் அவனுக்கு மறைத்தல் தொழிலை
உணர்ந்தான். இது போல் நாமும் நம் வினைகள் மறைக்கப்பட்டு
ஆன்மாவானது பிறப்பு எடுத்துள்ளது.
இறைவனின் பிரதிபலிப்பே ஆன்மா என்பதை உணரவேண்டும்.
ஆன்மா தான் தலைவன் என்றால்..
ஆன்மா தான் அனைத்துனாலும் பதிகிறது என்றால்...
உயிர் என்பது என்ன? அதன் அளவு என்ன? எப்படி இருக்கும்?
என்று நீங்கள் கேட்கலாம்..
1 .8 இல் நாம் இந்த கேள்விக்கான பதிலை காணபோகிறோம்.
இப்போது அனைவரும் மௌனத்துடன்
கண்களை மூடி நம்மை உணர்வோம்
" குருவே சரணம் "
" சர்வம் இறை மயம்" அனைத்தும் பெருகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக