புதன், 20 ஜூலை, 2011

1 .6A மனம்

மனம்"கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் மூலமாக ஆட்பட்டு,உட்பட்டு

செயல்படுவது"  தன்னையே அறிந்து கொள்ளாத வரை இதனால்

ஆன்மாவானது மீண்டும் மீண்டும்  பிறப்புகளை எடுக்கிறது. அதாவது,

நாம் ஒரு பாதையில் தொடர்ந்து செல்கிறோம் அந்த பாதையில்
ஒருகடை உள்ளது நாம் முதல் இரண்டு மூன்று நாட்கள் செல்கிறோம்

 
அப்போ நம்முடைய மூக்கு வாசம் பிடிக்கும் நேராக மனம் சென்றடையும்..

 
மற்றொரு நாள் கண்கள் காணும் அப்போ நல்ல வரு வருணு

முரு முருனு சிகப்பா ஒரு மீன் ஒன்று பொரிக்கபட்டு இருக்கும் உடனே

மனம் கேட்கும் என்ன இது? புத்தி(அறிவு)  சொல்லும் இது மீன் பொரிக்க

பட்டுள்ளது என்று. இங்கே மனம் எப்படி செயல்படுன்னு தெரிந்து இருக்கும்.

மேற்கண்ட உதாரணம் கண்,மூக்கு உதவியால் மனம் வசீகரிக்க பட்டது ..

பின் அந்த பாதை வழியாக நாம் செல்லும் போதெல்லாம் இதுவே

பழக்கமாகும்.

சில நேரங்களில்...

மனம் சொல்படி கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் செயல்படுகிறது இது

எப்போ நிகழ்கிறது என்றால் நாம் பிறப்புகள் - இறப்புகளை சந்தித்து

வந்துள்ளோம் அதன் மூலமாக நமக்கு பூர்வ ஜென்ம அனுபவங்கள் /

வசங்கள் நம் கர்ம பதிவுகளில் பதிந்து இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும் ஒரு தேடல்கள் நமக்கு வருகிறது யார்

சொன்னாலும் சொல்லாமல் போனாலும் அந்த தேடல்களில்நமக்கு ஒரு

ஈர்ப்பு வருகிறது அதன் மூலமாக மனம் மற்ற இரண்டையும்

ஆள்கிறது. அடுத்து நாம் காண இருப்பது புத்தி/அறிவு.. ( அனைதையு நாம்

சுருக்கமாக காண காரணம் நமக்கு முக்கியமானது இப்போ இவைகள்

அல்ல மரணம். பின்வரும் காலத்தில் இவைகளை விரிவாக காண்போம்)



ஞாயிறு, 17 ஜூலை, 2011

1.5 சர்வ முக்தி



இந்த அட்டவணையை கையில் வைத்து கொள்ளுங்கள்..

இனி  வருபவைகள் புரிய இவைகள் உதவும்.. இது மிக 


எளிய முறையில் தயாரிக்க பட்டுள்ளது.

இப்போ முதல் வேலை நாம் மனம் - புத்தி- சித்தம்

ஆகியவற்றை அறிந்துகொள்வோம் அப்பொழுதான் மரணத்தை 


புரிந்துகொண்டு என்னுடன் பயணிக்க முடியும்...




வெள்ளி, 15 ஜூலை, 2011

1 .4 அண்டமும் பிண்டமும்

அண்டமும் பிண்டமும் என்பது உலகமும் உடலும் என்பதன் பொருள் 

அடங்கியதாகும்.. உலகத்தில் உள்ள எங்கும் பரந்து விரிந்துள்ள 

பஞ்சபூதன்களான  தீ,நீர்,நிலம்,வாயு,ஆகாயம் இவைகளே நமது உடலிலும் 

அணுக்களிலும் நிறைந்து உள்ளது. உலகில் எந்த பொருள் ஆனாலும் 

சடப்பொருள்  ஆனாலும் அதற்குள் ஆற்றல் உள்ளது. உலகின் மத்தியில் 6000 

செல்சியஸ் அளவு தீ கொழுந்து விட்டு எரிகிறது  அதனால் தான் உலகம் இன்று

தொடர்ச்சியாக நீ வட்ட பாதையில் பூமி சுழந்துகொண்டு உள்ளது ( என்ஜினை 

போல). அதே போல், நமது உடலின் மத்தியிலும் தீயானது எரிந்துகொண்டு 

உள்ளது அதனால் தான் நமது உடல் சக்தியை பெற்றுக்கொண்டு இயங்குகிறது 

வடவகனி என்ற பெயரில். இதனால், தான் உயிர்களுக்கு விந்துநாதம் உற்பத்தி 

ஆகிறது. இது போல் உலகில் என்னென்ன நிகழ்வுகள் நிகழ்கிறதோ அதுபோல் 

நமது உடலிலும் அண்ட  நிகழ்வுகள் நடக்கிறது. மரணம் 100 சதவீதம் இயற்கை  

வடிவை சார்ந்தது ( மரணத்தின் பொது உயிர் நிலையை சொன்னேன் தவிர 

மரணத்தின் காரணத்தை கூறவில்லை)
 1 .3 .தியானம் ஒரு சிறு பார்வை

என்றும் அனைத்துக்கும் இவனின் குருவான முருக பெருமானுக்கும்

யோகத்தின் குருவான என் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி க்கும்

பாதங்கள் தொட்டு வணங்கிக்கொண்டு தியானம் பார்வை தருகிறேன்

தியானத்தை விளக்க நினைப்பது பால்வெளியில் உள்ள நச்சத்திரம்

கூட்டத்தை  எண்ணுவதற்கு  சமமாகும். எனவே நமக்கு தேவையானதை

மட்டும் எடுத்து கொள்வோம்  தியானம் என்பது :


எண்ணம் - எண்ணபடுபவன்-எண்ணுபவன் ஒன்றென உணர்வதாகும்

தியானத்தை பற்றி நான் சொல்வதை விட..  பகவான் கிருஷ்ணர்

சொல்வதை ..

கேளுங்கள் ...

"ப்ப்ரயண்ட்தமனஷம் ஹி ஏஷம் யோகிநம் ஷுகம் உத்தமம்

உபைதி யான்றஜஷம் ப்ரஹம் பூதம் அகல்மஷம் "

பொருள் : நிலையான மனம் உடைய யோகி ஒருவனுக்கு பாவங்கள் நீங்கள்

பெற்று ஆத்மா அனுபவம் என்ற சுகம் ஏற்படுகிறது. அவனது ரஜோ குணம்

விலகுகிறது இதனால் அவன் ப்ரம்ம நிலையை அடைந்து விடுகிறான்  ப.கீ.6 -29

நிலையான மனம் அடைய வேண்டும் என்றால் அது தியானத்தால் மட்டுமே

சாத்தியம். அதுமட்டுமல்ல, தியானத்தை  தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே

சர்வம் இறை மயமாக காணமுடியும்.

"யோ மாம் ப்யாதி சர்வத்ர சர்வம் ச மயி பஷ்யதி

தஷ்யஹம் ந ப்ப்ரனஷ்யாமி ஸ ச மே ந ப்ப்ரனஷ்யதி "

பொருள் : என்னை எங்கும் எதிலும் காண்கிறானோ, என்னில் அனைத்திலும்

காண்கிறானோ அப்படிப்பட்ட ஒருவனை நான் கைவிடுவதில்லை , அவனும்

என்னை கைவிடுவதில்லை .( இப்படியாக வாழ்ந்து வருபவன் கூட நான் irupen ) (ப.கீ.6 - 30 )(31 )

தியானம் மனதை மட்டுமா ஒருநிலை படுத்தவில்லை உங்கள் 
 
உடலையும் உறுதி படுத்துகிறது.

தியானத்தால் :

"அழியக்கூடிய

வாழ்கையின் தடைகள்

அகற்றப்படும்போது

அழிவற்ற ஒரு வாழ்க்கை நமக்கு

கிடைத்துவிடுகிறது " ( பதஞ்சலி யோகா சூத்ரம் 1:29 )

தியானத்தை சொல்ல நிறைய முக்கியமான விஷயங்கள் உள்ளது, 
 
அதை நாம் இப்போ காண முடியாது

என்னுடன் பயணித்து வாருங்கள் சொல்கிறேன்...
 
பதஞ்சலியார் சொன்னதை மனதில் நிறுத்தி  என்னுடன் 
 
பயணம் தொடருங்கள் ..

 

வியாழன், 14 ஜூலை, 2011

1.2 . தச வாயுக்கள் ஒரு அறிமுகம் :

நமது உடம்பில் தச வாயுக்களின் செயல்கள்

1 . பிராணன் : மேல் நோக்கிய இயக்கம்

2 . ஆபணன்   : கீழ் நோக்கிய இயக்கம்

3 . வியனன் :எல்லா பக்க இயக்கம்

4 . உதானன் : மாறன் வேளையில் ஜீவன் வெளியேற உதவும்

5 . சாமனன் : உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றும்

6 . நாகன் : வாந்தி, ஏப்பம்

7 . கூர்மன் : கண் இமைகளின் இயக்கம்

8 . கிரிகரன் : பசி

9 . தேவதத்தன் : கொட்டாவி

10 . தனஜ்ஜெயன் * : உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும்

இன்னும் நெறைய விஷயங்களை இந்த வாயுக்கள் செய்கிறது அதை

கொஞ்சம் கொஞ்சமாக  இந்த வழிபோக்கன் விளக்குவான் ...

கவனமாக படியுங்கள் புரியவில்லை என்றால் கேளுங்கள் இனி

வருபவைகளுக்கு இவைகளே மூலம்

1. 96 தத்துவங்கள்

1.1. 96 தத்துவங்கள்

1. பஞ்சபூதங்கள்
:5


1 .பிருதி  2 . அப்பு  3 . தேயு   4 . வாயு   5 . ஆகாயம்

2 . பஞ்சபூதங்களின் காரியக்கூருகள் :(25 ) 


1 .பிருதி : மயிர்,தோல்,எலும்பு,நரம்பு,தசை


2 .அப்பு: நீர்,உதிரம்,மூளை,நிணம்,சுக்கிலம்(விந்து)


3 .தேயு:ஆகாரம்,நித்திரை,பயம்,மைதுனம்,சோம்பல்


4 .வாயு:ஓடல்,இருத்தல்,கிடத்தல்,நடத்தல்,தத்தல்


5 .ஆகாய:குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாத்சரியம்

3 .பஞ்ச்செந்தீரம் : (புலன்) (5 )


மெய் , வாய்,கண்,மூக்கு, செவி

4 .தன்மாத்திரை ( புலன்களின் ஊடுக்கம்) : 5

 
ஓசை,ஊறு,ஓளி,சுவை,நாற்றம்

5 . கருமேந்தீரம் : 10 

 
கண் - 2 , காது - 2 , வாய்-1 , மூக்கு - 1 , கை - 2 , கால் - 2

6 . வாசல்கள் : 11 


கண், காது, நாசி துவரம், (3 * 2 )= 6  

வாய்,குயம்,புயம்,தொப்புள்,பிரம்மேந்திரம் ( 5 * 1 ) = 5

7 . அந்தகரன் : 4 

 
மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்

8 . குணம் : 3 


தமோ, ரஜோ, சாத்விகம்

9 . வாக்கு : 4


10 . ஈஷனை : 3

11 . வாயுக்கள் : 10 


பிராணன், அபானன் , வியனன், உதணன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், 


தேவதத்தன்,தனஜ்ஜெயன் 

12 . நாடிகள் : 10 


அத்தி,அலம்புடை,இடைகலை,பிங்கலை,சுழுமுனை,காந்தாரி,குகுதை,சங்கினி,சிகுவை,புருடன்

13 . புருடன் : 1 


( வாயுக்கள் , நாடிகள், புருடன்  பற்றி விரிவாக நான்காம் தலைப்பில் 


காண்போம்)

இவைகளே 96  தத்துவங்கள் ஆகும்.