புதன், 6 ஜூலை, 2011

இதில் என்ன இருக்கும் நிச்சயம் எனக்கு தெரியாது...

"ஒரு வழிப்போக்கன் தான் போகும் இடத்தை அறியமாட்டான் ஆனால், செல்லும் வழியை அறிவான் அது போல் தான் நானும்... "

இலக்கியத்துடன் எழுத நான் இலக்கியவாதி அல்ல;

கோர்வையாக எதுகை, மோனையுடன் எழுத எழுத்தாளனும் அல்ல;

கரகோஷம் வாங்க பேசும்,எழுதும் அரசியல்வதியும் அல்ல...

உழைப்பாளியின் வியர்வைகளில் உயரும் வணிகனும் அல்ல..

மக்களிம் அச்சத்தை பயன்படுத்தும்
போலிமதவாதியும் அல்ல..

அதற்காக, நான் நாத்திக வாதியும் அல்ல..

எதுவும் நான் இல்லை என்றால் பின் நான் யார்?

தேடலிம் விடை தான் என்ன?

இதோ நான் யார் கண்டு பிடிக்க சிறு குறிப்பு

" நான் ஒரு வழிப்போக்கன் சற்று இளைப்பாற ஓர் உடலை தேர்ந்து எடுத்து இப்போது உங்களுடன் உங்களுக்காக எழுதுகிறேன் எழுதபோறேன்... "

உங்கள் கண்களுக்காக வழிபோக்கனாய்

உங்கள் எண்ணங்களுக்கு எட்டாத விழி பொயயனாய்

உங்கள் அனைவருள்ளும் மெய்யின் மெய்யாய்

இருக்கும் நான் மட்டுமே உண்மை ஆன்மா

இதில் என்ன இருக்கும்... எதுவும் இருக்கும்...

நடுநிலையுடன்....

யாரையும் புண்படுத்த அல்ல ; நம்மை பண்படுத்த...

பொழுதுபோக்கு அல்ல ; பழுது பார்க்க...

என்கருத்துகள் தீர்வை தருவதல்ல.. பார்வையை தர....

வாருங்கள் இந்த வழிபோக்கனுடன் பயணியுங்கள்....
ஒரு காட்டில் வேடன் மற்றும் அவனின் மனைவி - ஒரு வயது குழந்தையும் வசித்து வந்தார்கள்..

வேடனுக்கு ஒருநாள் விலங்குகளே கிடைக்கவில்லை அவனும் பசி குடிசையில் மனைவி-குழந்தையும் பசி ... என்ன செய்வது என்று தெரியாமல் மரத்தின் மீது ஏறி பார்த்துகொண்டு இருந்தான் இரைக்காக!

மான்கள் கூட்டம் ஒன்று தண்ணீர் குடித்து விட்டு சென்று கொண்டு இருந்தது அப்போ தாய், மான் குட்டிகளை வழி மாறாமல் இருக்க அதட்டி கொண்டே போனது. அதில், ஒரு மான் மட்டும் தாய் சொல்லை காதில் போடாமல் வழி மாறியது...
அந்த மான் வருவதை வேடன் பார்த்துவிடுகிறான் அம்பை விடுகிறான் குறி தவறி விடுகிறது..
மான் ஓடுகிறது..
வேடன் துரத்துகிறான்..
நேரம் போகிறது..
மானுக்கு உயிர் மீது பயம் ஓட்டம்.. வேடனுகோ பசி தன் குடும்பமோ பசியால் உள்ளது பசி போக்க மான் வேண்டும் என்கிற ஓட்டம்..மானோ ஒரு புதரில் மறைந்தது.. வேடன் தேடுகிறான்.. அங்கே முனிவர் தவம் கோலத்தில் தியானம் பண்ணுகிறார். வேடன் அவரிடம் கேட்கிறான் அவரோ மௌனமாக இருக்கிறார்.. மானோ நிம்மதி அடைகிறது உடனே அந்த புதரில் இருண்ட கீரிப்பிள்ளை தன் எதிரி தான் இது என்று நினைத்து கத்துகிறது அதுக்கு அச்சம் கொண்டு மான் வெளிய வருகிறது.
வேடன் அந்த மானை கொள்கிறான்..

இந்த கதை பாவம் என்ற தலைப்பில் சொன்னானே அதுக்கு அல்ல; அடுத்த தலைப்பான விதி-சூழ்நிலை-காலம் முன்னோட்ட கதை ஆகும்.