வியாழன், 14 ஜூலை, 2011

1.2 . தச வாயுக்கள் ஒரு அறிமுகம் :

நமது உடம்பில் தச வாயுக்களின் செயல்கள்

1 . பிராணன் : மேல் நோக்கிய இயக்கம்

2 . ஆபணன்   : கீழ் நோக்கிய இயக்கம்

3 . வியனன் :எல்லா பக்க இயக்கம்

4 . உதானன் : மாறன் வேளையில் ஜீவன் வெளியேற உதவும்

5 . சாமனன் : உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றும்

6 . நாகன் : வாந்தி, ஏப்பம்

7 . கூர்மன் : கண் இமைகளின் இயக்கம்

8 . கிரிகரன் : பசி

9 . தேவதத்தன் : கொட்டாவி

10 . தனஜ்ஜெயன் * : உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும்

இன்னும் நெறைய விஷயங்களை இந்த வாயுக்கள் செய்கிறது அதை

கொஞ்சம் கொஞ்சமாக  இந்த வழிபோக்கன் விளக்குவான் ...

கவனமாக படியுங்கள் புரியவில்லை என்றால் கேளுங்கள் இனி

வருபவைகளுக்கு இவைகளே மூலம்

1. 96 தத்துவங்கள்

1.1. 96 தத்துவங்கள்

1. பஞ்சபூதங்கள்
:5


1 .பிருதி  2 . அப்பு  3 . தேயு   4 . வாயு   5 . ஆகாயம்

2 . பஞ்சபூதங்களின் காரியக்கூருகள் :(25 ) 


1 .பிருதி : மயிர்,தோல்,எலும்பு,நரம்பு,தசை


2 .அப்பு: நீர்,உதிரம்,மூளை,நிணம்,சுக்கிலம்(விந்து)


3 .தேயு:ஆகாரம்,நித்திரை,பயம்,மைதுனம்,சோம்பல்


4 .வாயு:ஓடல்,இருத்தல்,கிடத்தல்,நடத்தல்,தத்தல்


5 .ஆகாய:குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாத்சரியம்

3 .பஞ்ச்செந்தீரம் : (புலன்) (5 )


மெய் , வாய்,கண்,மூக்கு, செவி

4 .தன்மாத்திரை ( புலன்களின் ஊடுக்கம்) : 5

 
ஓசை,ஊறு,ஓளி,சுவை,நாற்றம்

5 . கருமேந்தீரம் : 10 

 
கண் - 2 , காது - 2 , வாய்-1 , மூக்கு - 1 , கை - 2 , கால் - 2

6 . வாசல்கள் : 11 


கண், காது, நாசி துவரம், (3 * 2 )= 6  

வாய்,குயம்,புயம்,தொப்புள்,பிரம்மேந்திரம் ( 5 * 1 ) = 5

7 . அந்தகரன் : 4 

 
மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்

8 . குணம் : 3 


தமோ, ரஜோ, சாத்விகம்

9 . வாக்கு : 4


10 . ஈஷனை : 3

11 . வாயுக்கள் : 10 


பிராணன், அபானன் , வியனன், உதணன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், 


தேவதத்தன்,தனஜ்ஜெயன் 

12 . நாடிகள் : 10 


அத்தி,அலம்புடை,இடைகலை,பிங்கலை,சுழுமுனை,காந்தாரி,குகுதை,சங்கினி,சிகுவை,புருடன்

13 . புருடன் : 1 


( வாயுக்கள் , நாடிகள், புருடன்  பற்றி விரிவாக நான்காம் தலைப்பில் 


காண்போம்)

இவைகளே 96  தத்துவங்கள் ஆகும்.


மரணம் 1

மரணத்தை பற்றி நாம் அறிந்துகொள்வதுக்கு முன் சில விஷயங்களை நாம்
தெரிந்து கொள்ளவேண்டும். மரணம் என்பது புதுமனை புகு விழா ஆகும்.
சுகமா / துக்கம என்பதை யாரும் அறியார். ஆனால், மரணம் பின்னும்
பிறப்புக்கு முன்னும் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறியார் அதையே
இறைவனின்  5  வது   தொழிலான மறைத்தல்.
இதை நாம் அறிவியல் மூலமாகவும், ஆன்மிக மூலமாகவும் காண

இருக்கிறோம்.
1.1 . 96 தத்துவங்கள்
1.2 . தச வாயுக்கள் ஒரு அறிமுகம்
1.3 . தவம் ( தியானம்) ஒரு பார்வை
1.4 . பிண்டமும் அண்டமும்
1.5 . குறிப்புகள்
இவைகளை நாம் சிறு குறிப்பாக கண்டபின் நாம் மரணம் பற்றி அறிவோம்.