வியாழன், 7 ஜூலை, 2011

பாவம் 1

ஒருவன் பரம ஏழையாக மற்றொருவன் பணக்காரனாக.. இன்னொருவன் நடுத்தர வாழ்க்கை உடையவனாக அமைவது ஏன்? 
ஒரு தாயின் கருவில் பிறந்த இரட்டை குழந்தைகள் குட பண்பில்-அழகில்-அறிவில்-நிலையில் மாற்றம் ஏன்?
அனைத்து திறமை இருந்தும் ஜோளிக்காதவர்கள் பலர் ஓரளவு திறமை இருக்கும் ஆனால் ஜொலிப்பார்கள் ..
ஒருவன் தொட்டதெல்லாம் வெற்றி மற்றவன் தொட்டதெல்லாம் தோல்வி இந்த நிலை எப்படி?
மாபெரும் வெற்றி பெற்றவன் குட தீடீர் என தொடர் தோல்வி சந்திப்பார்கள்- சிலர் தோல்வியில் இருந்து மீண்டு சாதனை படைப்பார்கள். 
உயரங்களை காணாமல் துயரங்களில் உழுவார்கள் பலர்?
சிலருக்கு அனைத்தும் இருக்கும் ஆனால் மனதில் ஏதோ வருடல்-துன்பம்-சங்கடம்-இருக்கும் அவர்களுக்கே காரணம் தெரியாமல் துயரத்தில் வாழ்வார்கள் ஏன் உயிர்களுக்கு இந்நிலை ....
ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு புலப்படும் உண்மை ஒன்று தான் 'நம்முடைய நிலைக்கு நாமே காரணம்' ஆனால் இந்த உண்மை புரியாமல் சிலர் கருணை பெருங்கடலான பரப்பொருளை தூற்றுவார்கள் இது அவர்களின் அறியாமையின் நிலையை காணவைக்கிறது.
என்றோ ஒருநாள் விதைக்கப்பட்ட விதைதான் இன்று மரமாக காட்சி தாருகிறது. அது போல என்றோ ஒரு நாள் நாம் செய்த வினைகள்தான் இன்று நம்முடன் விளையாடுகிறது. அந்த வினைகளே இன்ப-துன்பமாக காட்சி தருகிறது.
"நாம் அறிந்தோ - அறியாமலோ, புரிந்து-புரியாமலோ, சொல்லாலோ-செயலாலோ-எண்ணத்தாலோ மற்றவரின் உடலுக்கோ-உள்ளதுக்கோ-உயிருக்கோ துன்பம் விளைவிப்பது பாவமாகும் அதாவது தீயவினைகள்"
நீங்கள் கேட்கலாம் பாவங்களை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?என்று.. 
நாம் பல பிறப்புகள் மூலமாக நம்மால்-நமக்குள் குவிக்கப்பட்டுள்ள வினைகளை ஒரேயடியாக அறுக்க முடியாது.ஆனால் மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்கலாம். 
நீங்கள் கேட்ட கேள்வியைத்தான் பரமாத்மா கிருஷ்ணரிடம்,அர்ஜுனன் கேட்கிறார் :
"அத கேன ப்ரயுக்த : அயம் பாபம் சரதி பூருஷ :
அநிச்சண்ட அபி வார்ஷ்ணேய பலதிவ நியோஜித "
(ப.கீ.3-36)

பொருள்: "கிருஷ்ணா,மனிதன் பாவங்களை ஏன் செய்கிறான் ? பாவங்களில் இருந்து விலகி செல்ல வேண்டும் என்று நினைத்தாலும்,சென்றாலும் பாவம் செய்யுமாறு எதனால் தூண்டபடுகிறான் "

பரமாத்மா கிருஷ்ணர் அழகாக  பதிலுரைக்கிறார்  :
"காம ஏஷ க்ரோத ஏஷ  ரஜோ குணா சமுத்ப:
மகாயத : மகாபாப்மா வித்தி ஏனம் இஹா வைரிணம்"
(ப.கீ.3-36)  
பொருள்:"அர்ஜுனா! ரஜோகுனத்தினால் உருவாகும் காமம்,குரோதம் (தீராத கோபம்) இந்த இரண்டே பாவங்களுக்கு காரணமாக அமைகின்றன ".

இங்கு கூறப்பட்டுள்ள காமம் என்பது உடல் இச்சை மட்டுமல்ல முன்பு ஏற்பட்ட அனுபவத்தால் ஒரு பொருளுக்காக ஏங்குதல்,அந்த பொருளை பற்றி நினைக்கும் போது அல்லது கேட்கும்போது உண்டாகும் ஏக்கம் (தீராத ஆசை) என்பதாகும்.
அப்படிப்பட்ட இந்த காமம் இரண்டு வகைப்படும்

ஒன்று "இந்திரியம் விஷய கவர்ச்சி மூலமாக உண்டாவது இது இயற்கை"

மற்றொன்று, "மனம் மூலமாக கவர்ச்சி ஏற்பட்டு,மனதின் ஏக்கத்தால் உருவாதல்"
இரண்டாவதாக வரும் காமத்தை (காம எண்ணத்தை) போக்கிட முடியும்.
முதலாவதாக இருக்கும் தன்மையானது பூர்வஜென்ம வாசனை, பூர்வ செயல்கள் காரணமாக ரஜோ குணம் தலை தூக்கும் அப்போது நமக்கு மிகுந்த காமம் உண்டாகிறது! 

செல்லேறும்புகள் பெரும் புற்றை எழுப்புவது போல ஒவ்வொரு நொடியும் காமம் நமக்குள் பெரும் திரளாக எழ காத்து கொண்டுருக்கும். அப்படி எழும் காமத்தை அடக்கும் போதோ - யாரவது அந்த எண்ணத்தை அடையமுடியாமல் எதன் மூலமாவது தடைபடும் போதோ, யாரவது தடுத்தாலோ கோபம் வரும் அந்த கோபம் நாளடைவில் குரோதமாக மாறுகிறது. 
காமம் ஏற்படும்போது மயில்கூச்சல் எடுக்கும், கண்கள் விரியும், முகம் மலரும்(இது காதலர்களுக்கும் ஏற்படும்).
இந்த காமத்தினால் விளைவுகள் என்று பார்த்தால் :
*வேட்டை
*கவறல்
*பகல்துஞ்சல் 
*வம்பாடல்
*பெண்களுடன் குலவுதல் 
*குடித்தல்
*கூத்து 
*பல்லியம்
*இவற்றில்  மயக்கம்    
*மனம் போனபடி அலைதல் 
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறது, அது போல காமம் என்ற பெரும் நெருப்பு மனிதனின் அனைத்து நற்குணத்தையும் நொடிபொழுதில் பொசுக்கிவிடும்.
அப்படி காமத்தினால் எழும் குரோதம் வந்தால்:
உடல் நடுக்கம்,
வியர்வை,
உதடு  கடித்தல்,
கண்சிவக்கும்.
இந்த குரோதத்தினால் விளைவுகளாவது எட்டு ஆகும் :
*கோள்
*பொய்த்துணிவு
*இரண்டகம்
*பொறாமை
*பிறர் நலம் சகியாமை 
*பிறன் பொருள் விழைதல் 
*காரணமின்றி ஒறுத்தல்
*வசை கூறல்  
" குரோதம் வந்தால் குழப்பம் வரும்
குழப்பம் வந்தால் குணம் மாறும்"
இந்த வழிபோக்கன் பயணத்தை தொடங்குகிறேன்.. மீண்டும் ஓய்வு எடுக்கும் போது சந்திப்போம்..