வெள்ளி, 15 ஜூலை, 2011

 1 .3 .தியானம் ஒரு சிறு பார்வை

என்றும் அனைத்துக்கும் இவனின் குருவான முருக பெருமானுக்கும்

யோகத்தின் குருவான என் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி க்கும்

பாதங்கள் தொட்டு வணங்கிக்கொண்டு தியானம் பார்வை தருகிறேன்

தியானத்தை விளக்க நினைப்பது பால்வெளியில் உள்ள நச்சத்திரம்

கூட்டத்தை  எண்ணுவதற்கு  சமமாகும். எனவே நமக்கு தேவையானதை

மட்டும் எடுத்து கொள்வோம்  தியானம் என்பது :


எண்ணம் - எண்ணபடுபவன்-எண்ணுபவன் ஒன்றென உணர்வதாகும்

தியானத்தை பற்றி நான் சொல்வதை விட..  பகவான் கிருஷ்ணர்

சொல்வதை ..

கேளுங்கள் ...

"ப்ப்ரயண்ட்தமனஷம் ஹி ஏஷம் யோகிநம் ஷுகம் உத்தமம்

உபைதி யான்றஜஷம் ப்ரஹம் பூதம் அகல்மஷம் "

பொருள் : நிலையான மனம் உடைய யோகி ஒருவனுக்கு பாவங்கள் நீங்கள்

பெற்று ஆத்மா அனுபவம் என்ற சுகம் ஏற்படுகிறது. அவனது ரஜோ குணம்

விலகுகிறது இதனால் அவன் ப்ரம்ம நிலையை அடைந்து விடுகிறான்  ப.கீ.6 -29

நிலையான மனம் அடைய வேண்டும் என்றால் அது தியானத்தால் மட்டுமே

சாத்தியம். அதுமட்டுமல்ல, தியானத்தை  தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே

சர்வம் இறை மயமாக காணமுடியும்.

"யோ மாம் ப்யாதி சர்வத்ர சர்வம் ச மயி பஷ்யதி

தஷ்யஹம் ந ப்ப்ரனஷ்யாமி ஸ ச மே ந ப்ப்ரனஷ்யதி "

பொருள் : என்னை எங்கும் எதிலும் காண்கிறானோ, என்னில் அனைத்திலும்

காண்கிறானோ அப்படிப்பட்ட ஒருவனை நான் கைவிடுவதில்லை , அவனும்

என்னை கைவிடுவதில்லை .( இப்படியாக வாழ்ந்து வருபவன் கூட நான் irupen ) (ப.கீ.6 - 30 )(31 )

தியானம் மனதை மட்டுமா ஒருநிலை படுத்தவில்லை உங்கள் 
 
உடலையும் உறுதி படுத்துகிறது.

தியானத்தால் :

"அழியக்கூடிய

வாழ்கையின் தடைகள்

அகற்றப்படும்போது

அழிவற்ற ஒரு வாழ்க்கை நமக்கு

கிடைத்துவிடுகிறது " ( பதஞ்சலி யோகா சூத்ரம் 1:29 )

தியானத்தை சொல்ல நிறைய முக்கியமான விஷயங்கள் உள்ளது, 
 
அதை நாம் இப்போ காண முடியாது

என்னுடன் பயணித்து வாருங்கள் சொல்கிறேன்...
 
பதஞ்சலியார் சொன்னதை மனதில் நிறுத்தி  என்னுடன் 
 
பயணம் தொடருங்கள் ..

 

கருத்துகள் இல்லை: